நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதன்முதலாக கிருமித்தொற்று ஏற்பட்டு சரியாக 100 நாட்கள் ஓடிவிட்டன. அந்த நகரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் நியூயார்க் நகரம் தன் கதவுகளைத் திறந்துவிட நேற்று ஆயத்தமானது.
அந்த நகரில் ஏறக்குறைய 22,000 பேர் மாண்டு இருக்கிறார்கள். 205,000 பேரைக் கிருமி தொற்றி இருக்கிறது. அங்கு கட்டம் கட்டமாகக் கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்றன. பல துறைகளையும் சேர்ந்த 400,000 ஊழியர்கள் வேலைகளுக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரம்தான் கொரோனா கிருமித்தொற்றின் மையமாக இருந்து வந்தது. கூடியவிரைவில் நியூயார்க் நகரம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று அந்த மாநில மற்றும் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

