கொவிட்-19: நியூசிலாந்து வெற்றி; கட்டுப்பாடுகள் அகலுகின்றன

கொவிட்-19: நியூசிலாந்து வெற்றி; கட்டுப்பாடுகள் அகலுகின்றன

1 mins read
76c08fcb-1e5e-4c52-b962-bd814891303f
நியூசிலாந்துக்கு அதிக சுற்றுப் பயணிகள் வருவார்கள் என்பதால் கிருமி இறக்குமதியாகும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படாது என நம்புவதாக பிரதமர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். படம்: ஏஎப்பி -

வெலிங்டன்: கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் நியூசிலாந்து முழு வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அங்கு சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்றன.

எல்லைக் கட்டுப்பாடுகள் தவிர இதர எல்லா கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டு இன்று முதல் வழக்க நிலை திரும்பும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று அறிவித்தார்.

நியூசிலாந்தில் கடந்த 17 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை. அங்கு கடைசி நோயாளியும் குணமடைந்துவிட்டதாக நேற்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நாட்டில் சுமார் 5 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள்.

நியூசிலாந்தில் கொரோனா ஒழிய பல காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அங்கு கிருமித்தொற்றுக்கு 1,500 பேருக்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். 22 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

நியூசிலாந்துக்கு அதிக சுற்றுப் பயணிகள் வருவார்கள் என்பதால் கிருமி இறக்குமதியாகும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படாது என நம்புவதாக பிரதமர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.