வியட்னாமில் 1,100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

வியாட்னாமின் குவாங் நாம் என்ற இடத்தில் 1,100 ஆண்டுகள் பழமையான ஒற்றைக்கல்லால் ஆன சிவலிங்கத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வியாட்னாமின் குவாங் நாம் பகுதியில் ஏராளமான சிவலாயங்கள் உள்ளன. ஆனால் 1969ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் இங்கிருக்கும் கோவில்களில் பெரும்பலான பகுதிகள் சிதைந்து போன நிலையில் காணப்படுகின்றன.

2011ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை சார்பில் குவாங் நாம் பகுதியில் உள்ள சிவலாயங்களில் மறுசீரமைப்பு பணி துவங்கியது. கோவில்களின் மறுசீரமைப்பிற்காக இந்தியா உதவுவது ஒரு கலாச்சார பரிமாற்றத்திற்கான எடுத்துக்காட்டு என்று கூறப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற மறுசீரமைப்புப் பணியின்போது 1,100 ஆண்டுகள் பழமையான ஒற்றைக்கல்லால் வடிவமைக்கப்பட் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இந்தியா மற்றும் வியாட்னாம் இடையே உள்ள நாகரிகத் தொடர்பை இந்த கண்டுபிடிப்பு மீண்டும் உறுதி செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!