கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் சாபா மாநில முன்னாள் முதல்வர் மூசா அமான் மீதான 46 குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்துள்ளது.
மூசாவிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அரசு தரப்பு வழக்கறிஞர் அஸார் அப்துல் ஹமீது மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்ததாக நீதிபதி முகமட் ஜாமீல் உசேன் தெரிவித்தார்.
வழக்கின் உண்மைகளை கண்டறிவதில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடந்துகொண்டதாக அரசு மற்றும் நீதித்துறைக்கு மூசா நன்றி தெரிவித்தார்.
2003 முதல் 2018ஆம் ஆண்டு வரை சாபா முதல்வராக இருந்த மூசா அமான், வெட்டுமர நிறுவனங்கள் தொடர்பான 30 லஞ்ச குற்றச்சாட்டுக்கள் மற்றும் 16 சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்தார்.
கடந்த மாதம் முன்னாள் பிரதமர் நஜிப்பின் வளர்ப்பு மகன் 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.