ஹனோய்: 30 நாட்களாக கொரோனா தொற்று பதிவாகாத நாடுகளுக்கு விமானச் சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டு வருவதாக வியட்னாம் பிரதமர் நுயேன் சுவான் கூறியுள்ளார்.
ஜப்பான், தென்கொரியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட முக்கிய நாடுகளும் அதில் அடங்கும். ஆனால், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. வியட்னாமில் 332 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அங்கு எந்த உயிரிழப்பும் இல்லை.
இந்தோனீசியா: உள்நாட்டு விமான சேவை
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தினசரி கிருமித்தொற்று சம்பவங்கள் ஆக அதிகமாக பதிவாகியிருந்தாலும், அங்கு உள்நாட்டு விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியது. 70 விழுக்காட்டு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்துடன் வருவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

