மலேசியாவில் நேற்று 7 பேருக்கு தொற்று; 281 பேர் குணமடைந்தனர்

1 mins read
5b5845de-94ab-4bf6-ae76-13008b3f9e7b
நேற்று முதன்முறையாக மலேசியர்கள் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்றார் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் நூர் இஷாம். படம்: ஏஎப்பி -

கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஆக அதிகமான எண்ணிக்கையாக 281 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று பதிவான ஏழு புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் ஆறு பேர் வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், ஒருவர் வெளிநாட்டு ஊழியர். முதன்முறையாக மலேசியர்கள் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்றார் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் நூர் இஷாம்.