லண்டன்: கொரோனா கிருமித்தொற்று சீனாவில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே பரவத் தொடங்கியிருக்கலாம் என்று ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தின் செயற்கைகோள் படம் மற்றும் இருமல், வயிற்றுபோக்கு உள்ளிட்ட வார்த்தைகளின் இணைய தேடல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஹார்வர்ட்டின் இந்த ஆய்வறிக்கை அபத்தமானது என்று சீனா சாடியுள்ளது.

