ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பது அபாயம் என சீனா எச்சரிக்கை; ஆஸ்திரேலியா மறுக்கிறது

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பது அபாயம் என சீனா எச்சரிக்கை; ஆஸ்திரேலியா மறுக்கிறது

2 mins read
541eb304-181a-45f7-a1c1-58a20c18c333
ஆஸ்திரேலியாவில் 500,000 க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். படம்: ஏஎஃப்பி -

பெய்ஜிங்: ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பதால் உள்ள அபாயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என சீனா தமது நாட்டு மாணவர்களை எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவிருக்கும் வேளையில் சீன வெளியுறவு அமைச்சின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவல் மற்றும் ஆசியர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு போன்றவற்றால் மாணவர்களுக்கு ஆபத்து உள்ளது என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சீனா தெரிவித்தது.

"ஆஸ்திரேலியாவுக்குப் போவதற்கு முன்போ அல்லது ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்பு வதற்கு முன்போ மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"ஆஸ்திரேலியாவில் 'கொவிட்-19' கிருமிப்பரவல் வலுவாகக் கட்டுப் படுத்தப்படவில்லை. இந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதால் மாணவர்களுக்கு கிருமித் தொற்றக்கூடிய அபாயம் ஏற்படலாம். அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆசியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சம்பவங்கள் நடைபெறலாம்," என்று என்று சீனா தெரிவித்தது.

ஆனால் ஆஸ்திரேலியா பாதுகாப்பான நாடல்ல என்று கூறப்படுவதை ஆஸ்திரேலியாவும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களும் மறுத்துள்ளன.

இதற்குப் பதில் கொடுத்துள்ள ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் டென் டெஹான், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் ஆஸ்திரேலியாவில் பல இனக் கலா சாரம் வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

உலகிலேயே கொரோனா கிருமியை வேகமாகக் கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்றார் அவர்.

ஆஸ்திரேலியாவில் கிருமிப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

உணவகங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனா வெளியிட்டுள்ள எச்சரிக்கையால் ஆஸ்திரேலியா அதிர்ச்சியடைந்து உள்ளது.

கொரோனா கிருமி எங்கிருந்து பரவியது என்பது குறித்து தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியதை ஆஸ்திரேலியா ஆதரித்ததால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா இப்படியொரு எச்சரிக்கையை வெளியிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

உலக நாடுகளின் பொருளி யலை சீரழித்து ஏறக்குறைய உலகம் முழுவதும் 400,000 பேரின் உயிரைப் பலி வாங்கியிருக்கும் கொரோனா கிருமி கடந்த ஆண்டு முதல் முறை யாக சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டது.