ஈப்போ ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஈப்போ ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

1 mins read
cbb4b30a-69fe-4e79-ad44-5d313be123f4
ஈப்போ ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் நாளை முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி. படம்: ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் ஃபேஸ்புக் பக்கம் -

மலேசியாவின் லோரோங் ஈப்போவில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்திற்குச் செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்துக்குள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி கோரி மலேசிய இந்து சங்கத்துக்கு விண்ணப்பித்ததையும், கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சங்கம் அனுமதி அளித்ததையும் அந்த ஆலயத்தின் துணைத் தலைவர் எஸ்.தேவராஜ், பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணிவது, உடல் வெப்பநிலையை அளப்பது, தங்களது தொடர்பு தகவல்களைப் பதிவு செய்வது போன்றவற்றை ஆலயத்துக்குள் நுழையும் முன்பு பக்தர்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

"இப்போது முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்," என்றார் அவர்.

ஆலயத்துக்குள் ஒரு நேரத்தில் 30 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் நடப்பில் உள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்