ஜார்ஜ் ஃபிளோய்ட் மரணம்: ஒருவர் பிணையில் விடுவிப்பு

அட்லாண்டா: கறுப்பு இனத்தவரான ஜார்ஜ் ஃபிளோய்ட் (46), போலிஸ் காவலில் மரணமடைந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு முன்னாள் போலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிகாரியான 37 வயது தாமஸ் லேன், 750,000 அமெரிக்க டாலர் (S$1 மி.) பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டார்.

சென்ற மாதம் 25ஆம் தேதியன்று போலிஸ் காவலில் நடந்த ஃபிளோய்டின் மரணம் தொடர்பில் கொலைக்குத் துணையாக இருந்ததாக லேன் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

நான்கு அதிகாரிகளும் மின்னியபோலிஸ் காவல் பிரிவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக போலிஸ் கையாளும் அடக்குமுறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!