வீடு திரும்ப காத்திருந்த மாது கொவிட்-19க்கு பலியானார்

வீடு திரும்ப காத்திருந்த மாது கொவிட்-19க்கு பலியானார்

1 mins read
e6861842-1e2d-4efb-8221-a8280236bf08
-

மணிலா: கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு மாது, வீட்டுக்குச் சென்று தன் குடும்பத்தாரைப் பார்க்க ஐந்து நாட்களாக விரைவுச்சாலை ஓரமாகக் காத்திருந்து உயிரிழந்தார். கலபங்கா பகுதியில் உள்ள தன் வீட்டுக்குச் சென்று நான்கு பிள்ளைகளையும் பார்க்க வேண்டும் என்பதற்காக 33 வயது திருவாட்டி மிஷெல் சில்வர்டினோ பேருந்துக்காக காத்திருந்தார்.

பணிப்பெண்ணாக வேலை செய்த அவர், இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இரண்டு முறை காவலர்களுடன் சென்றார்.

அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றபோது அங்கு யாருமில்லை என்றும் காவல் நிலையத்தில் ஓய்வெடுத்தபோது அவரிடம் கொவிட்-19 அறிகுறிகள் தெரிந்தன என்றும் கூறப்பட்டது. இருப்பினும் அந்த மாது தனக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மறுபடியும் சாலைக்கே சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

அவருடைய பணத்தையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

படம்: நெத்தெனியல் ஃபேஸ்புக்