நெடுஞ்சாலையில் நாயைக் காப்பாற்றிய போலிசார்

நெடுஞ்சாலையில் நாயைக் காப்பாற்றிய போலிசார்

1 mins read
926109e1-4bf7-4d61-be53-b1d0cdcbac99
-

மலேசியாவின் ஒன்றிணைந்த நெடுஞ்சாலையில் காயமடைந்த நாயை போக்குவரத்து போலிசார் காப்பாற்றினர். சிலாங்கூர் மாநிலத்தின் ஷா அலாம் நகரைச் சேர்ந்த அந்த அதிகாரிகளையும் பாதிக்கப்பட்ட நாயையும் காட்டும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இலேசாகக் காயமடைந்த இந்நாய்க்கு அடிப்படை சிகிச்சை கொடுக்கப்பட்ட பிறகு அது மீண்டும் நடக்க முடிந்ததாக மலேசியாவின் பேஸ்புக் பக்கம் குறிப்பிடுகிறது.

"இப்புவியிலுள்ள ஒவ்வோர் உயிரினமும் மதிப்புமிக்கது. ஒவ்வோர் உயிரும் சுகமாகவும் நிம்மதியுடனும் வாழவேண்டும் என்பதால் நாம் நல்லது செய்யவேண்டும், ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டவேண்டும்," என்று அந்தப் பக்கத்திலுள்ள ஒரு பதிவு குறிப்பிடுகிறது.