இந்தோனீசியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இம்மாத இறுதி வரை அதிகமாக இருக்கும் என்று தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்ற வாரத்தில் இந்தோனீசியாவில் ஒவ்வோர் நாளும் 1,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தீவிர தொடர்பு தடமறிதல் மற்றும் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனை எண்ணிக்கை காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொவிட்-19 மேலாண்மையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சென்ற மே மாதம் 24 அன்று முடிவடைந்த நோன்பு பெருநாளுக்கு முன்னதாக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை பலனளிக்காததால், கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்தோனீசிய பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பாண்டு ரியோனோ கூறினார்.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் சமூக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, வரும் வாரங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு இதுவரை 37,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,091 பேர் மாண்டுவிட்டனர்.

மாண்டோர் எண்ணிக்கையில் தென்கிழக்காசிய நாடுகளில், இந்தோனீசியா முதலிடத்தில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!