சிட்னி: ஆஸ்திரேலியாவில் கிருமித் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும், நூலகங்கள், சமூக மையங்கள், இரவுவிடுதிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன.
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நியூ சவுத் வேல்சில், தேவாலயங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் 50 பேர் மட்டுமே கூடமுடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் 4 சதுர மீட்டர் இடைவெளி போதும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் இரவுவிடுதிகள் மற்றும் இசை விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்சில் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு ஒன்பது கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதாக மாநில அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
விக்டோரியாவில் தற்போது 20 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 22ஆம் தேதி முதல் 50 பேர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

