கொவிட்-19 நெருக்கடியால் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கலாம். இதனால் பொதுத் தேர்தலுக்காக கட்சிகள் பேரணிகளையும் மக்களுடனான சந்திப்புகளையும் நடத்த இயலாது. இருப்பினும் வாக்காளர்களுக்குத் தங்களின் பிரசாரம் சென்றடைய, கட்சிகள் மாற்று வழிகளை நாடவுள்ளன. இணையக் கலந்துரையாடல்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், வீடுகளுக்குத் தனியாகவோ சிறிய குழுக்களாகவோ செல்லுதல் போன்ற வழிகளை மக்கள் செயல் கட்சி பயன்படுத்த உள்ளது. கார் மீது ஒலிப்பெருக்கிகளைப் பொருத்துவது, வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பது, முகக்கவசமும் பிரசார துண்டுத் தாளையும் கொண்ட பொட்டலங்களை வீட்டு வாசலில் வைப்பது போன்ற உத்திகளை மற்ற கட்சிகள் கையாள உள்ளன.
தேர்தல் பிரசாரத்திற்கு மாற்று வழிகளை நாடும் கட்சிகள்
1 mins read
கோப்புப்படம் -

