எல்லைகளை மீண்டும் திறக்கும் ஐரோப்பிய நாடுகள்

1 mins read
18abc8e9-1e2f-42d6-936b-00afaf33688d
ஐரோப்பிய நாடுகள் அவற்றின் எல்லைகளை மீண்டும் திறந்து வருகின்றன. படம்: ஏஎப்பி -

பிரசல்ஸ்: ஐரோப்பிய நாடுகள் அவற்றின் எல்லைகளை மீண்டும் திறந்து வருகின்றன. கொரோனா கிருமித்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அவற்றின் எல்லைகளை கடந்த மூன்று மாதங்களுக்கு மூடி வைத்திருந்தன.

இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருவதால் எல்லைகளை அவை திறந்து வருகின்றன.

ஜெர்மனி அதன் எல்லைகளைத் திறந்ததும் ஜெர்மானியர்கள் பலர் விடுமுறைக்காக டென்மார்க்கிற்குச் சென்றுள்ளனர். மலிவான சிகரெட்டுகளை வாங்க பிரெஞ்சுக்காரர்கள் பலர் பெல்ஜியத்துக்குச் சென்றுள்ளனர்.

கூடுதல் அனைத்துலக விமானச் சேவைகளுக்கு கிரேக்க விமான நிலையங்கள் அனுமதி வழங்கியுள்ளன.