இரு கொரியாக்களின் பொது தகவல் தொடர்பு அலுவலகத்தைத் தகர்த்தது வடகொரியா; அதிகரிக்கும் விரிசல்

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமான பொது தகவல் தொடர்பு அலுவலகம் வடகொரியாவின் கேசோங் நகரில் 2018ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இருநாடுகளுக்கும் இடையிலான விரிசல் மேலும் மோசமடைந்ததில் அந்தப் பொது தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரோயா தகர்த்துள்ளது.

வடகொரியாவிலிருந்து தப்பித்துச் சென்றவர்கள் அண்மையில் தென்கொரிய எல்லையிலிருந்து வடகொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசுவதையும் பிரசார வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களை அனுப்பியதை வடகொரியா கடுமையாகச் சாடியது.

தென்கொரிய மற்றும் வட கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய தனது ராணுவம் தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்திருந்த சமயத்தில் பொது தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது.

வடகொரியாவிலிருந்து தப்பி ஓடியவர்களுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் தந்துள்ள தென்கொரியாவுக்கும் தக்க பதிலடி கொடுக்க பொது தகவல் தொடர்பு அலுவலகத்தைத் தகர்த்திருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தனது ராணுவம் தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான அணுவாயுதப் பேச்சுவார்த்தை முடங்கியிருக்கும் இவ்வேளையில் தென்கொரியாவுக்கு நெருக்குதல் தர வடகொரியா இத்தகைய செயல்களில் இறங்கியிருக்கலாம் என்று தென்கொரியா கூறியது

1950களில் நடந்த கொரியப் போரின்போது வடகொரியாவும் தென்கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!