பெய்ஜிங்கில் மேலும் 27 பேருக்கு கிருமித்தொற்று

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மேலும் 27 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கிருமி பரவாமல் இருக்க கூடுதல் கட்டுப்பாடுகளை சீன அதிகாரிகள் நடைமுறைப்

படுத்தியுள்ளனர்.

கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் கொண்டோருக்கு பெய்ஜிங்கிலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கிலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் சில போக்குவரத்துச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெய்ஜிங்கில் உள்ள பிரதான மொத்தவிற்பனை உணவுச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் அக்கறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் பலருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!