மலேசியாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா

மலேசியாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா

1 mins read
6aef3e3d-7bd3-4bc1-a21d-f77bebf977e1
தனிமைப்படுத்தப்படும் நிலையங்களில் இருந்து 147 பேர் தப்பி ஓடிவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். படம்: ராய்ட்டர்ஸ் - லிம் ஹுய் டெங் -

புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்தம் 8,505 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள 11 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய மலேசியராவார். வெளிநாட்டில் இருந்தபோது அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

10 பேருக்கு உள்ளூரில் சமூக அளவில் கொரோனா கிருமி பரவியதாக தெரிவித்த மலேசிய சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, அவர்களில் நால்வர் மலேசியர்கள் என்று தெரிவித்தார்.

அவர்களில் மூவர் சரவாக்கில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஆறு வெளிநாட்டவர்களில் இருவர் கோலாலம்பூரில் இருந்ததாகவும் நால்வர் நெகிரி செம்பிலானில் இருந்ததாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

கிருமித்தொற்று காரணமாக நேற்று மலேசியாவில் மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.