மின்னூட்டியால் சுத்தம் செய்யப்படக்கூடிய முகக்கவசம் கண்டுபிடிப்பு

1 mins read
07d57a3b-434a-4ee7-b863-1a47d251986f
இஸ்ரேலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள மின்னூட்டியைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடிய முகக்கவசத்தின் மாதிரி. படம்: TECHNION/FACEBOOK -

மறுபயன்பாட்டு முகக்கவசத்தை கைபேசி மின்னூட்டிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள முகக்கவசம், மருத்துவர்கள் பயன்படுத்தும் என்95 முகக்கவசத்தைப் போன்று உள்ளது. இதில் மின்னூட்டியை இணைக்கும் வசதியும் உள்ளது.

இதன் மூலம் மின் இணைப்பு பெறப்படும்போது முகக்கவசத்தின் கார்பன் இழைகளின் உள் அடுக்கு 70 டிகிரி செல்சியல் வரை சூடு படுத்தப்படுகிறது. இது கொரோனா கிருமியை அழிப்பதற்கு போதுமான வெப்பநிலை என்று கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்களில் முகக்கவசம் சுத்தமாகிவிடும் என்றும் அப்போது பயனீட்டாளர் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று கூறுகிறார் ஆய்வை வழிநடத்திய ஹைஃபாவில் உள்ள டெக்னியன் பல்கலைக்கழக பேராசிரியர் யெய்ர் ஐன்-எலி.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் பொருளாதார ரீதியாகவோ அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவோ இல்லாத நிலையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்