மீண்டும் தொற்று; ராணுவத்தினரை ஈடுபடுத்திய நியூசிலாந்து பிரதமர்

மீண்டும் தொற்று; ராணுவத்தினரை ஈடுபடுத்திய நியூசிலாந்து பிரதமர்

1 mins read
b814e9de-595d-4ffa-b081-e0b3917540a6
நியூசிலாந்தில் தனிமைப்படுத்தல் மையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் எல்லை கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் தற்காப்பு துறையின் உதவித் தலைவரான டிக்பி வெப் என்பவரை நியமித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டென் கூறினார். -

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் இருவர் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தனிமைப்படுத்தும் மையங்களின் பணிகளை ராணுவம் மேற்பார்வையிடும் என்று கூறியுள்ளார் அதன் பிரதமர் ஆர்டென்.

தனிமைப்படுத்தல் மையத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட பிரிட்டனில் இருந்து வந்த இரண்டு பெண்களுக்கு பின்னர் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்களது பெற்றோர் உடல்நலம் இல்லாமல் இருந்த நிலையில், மையத்தில் இருந்து முன்பே வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கொரோனா தொற்று இல்லாத நாடு என்ற நிலையை நியூசிலாந்து இழக்க நேர்ந்தது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் மையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் எல்லை கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் தற்காப்பு துறையின் உதவித் தலைவரான டிக்பி வெப் என்பவரை நியமித்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிகா ஆர்டென் கூறினார்.

ராணுவ தளவாடங்கள், அதன் செயல்பாட்டு நிபுணத்துவம் மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகளில் பணிபுரிவதற்கும் தேவைப்பட்டால் ராணுவத்திரை நியமிக்கலாம் என்று அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஆர்டெர்ன் கூறுகையில், "நாம் அனைவரும் அடைந்துள்ள தற்போதைய சாதகமாக சூழ்நிலையை, செயல்முறைகள் சரியாகப் பின்பற்றப்படாததால் மாறுவதை என்னால் அனுமதிக்க முடியாது," என்றார்.

உலக நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று இல்லாத நாடாக அறிவித்த நியூசிலாந்து, சமூக மற்றும் பொருளியல் கட்டுப்பாடுகளை சென்ற வாரம் முழுவதும் தளர்த்தியது.