ஆஸ்திரேலியா: புதிய உச்சத்தை தொட்ட வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியா: புதிய உச்சத்தை தொட்ட வேலையின்மை விகிதம்

1 mins read
63b1148f-a448-4f95-871a-5eb6e4d65fba
படம்: ஊடகம் -

சிட்னி: கொவிட்-19 நெருக்கடியின் காரணத்தால் ஆஸ்திரேலியாவில் உள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டன. எண்ணற்றவர்கள் தங்களின் வேலையை இழந்தனர்.

இதனால் வேலையின்மை விகிதம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்ற மாதம் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த எண்ணிக்கை பெரும் அவலத்திற்குரியது என்று கூறிய பிரதமர் ஸ்காட் மோரிசன், மிகப் பெரிய பொருளியல் சவால்களை நாடு எதிர்நோக்குவதாகவும் எச் சரித்தார்.

இந்நிலையில் முன்னுரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும் மும்மடங்கு வேலை இழப்பு நேர்ந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.