மலேசியாவில் தொற்றிலிருந்து மீண்டோர் விகிதம் 94.6%; புதிதாக 6 பேருக்கு மட்டுமே தொற்று

மலேசியாவில் தொற்றிலிருந்து மீண்டோர் விகிதம் 94.6%; புதிதாக 6 பேருக்கு மட்டுமே தொற்று

1 mins read
a939b70c-2480-4457-be2c-515a328b6664
கோலாலம்பூரில் இருக்கும் சந்தை ஒன்றில் நுழையும் வாடிக்கையாளருக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யும் அதிகாரி. படம்: ஏஎஃப்பி -

மலேசியாவில் இதுவரை 8,070 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மீண்டிருப்பதாக மலேசியா சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது மொத்த நோயாளிகளில் 94.6 விழுக்காடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் இன்று (ஜூன் 19) புதிதாக ஆறு பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் நால்வர் மலேசியர்கள். இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். அதனைத் தொடர்ந்து மொத்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 8,535க்கு உயர்ந்தது.

வியாழக்கிழமை நிலவரப்படி 8,000 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று மேலும் 70 பேர் கிருமித்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நேற்று 127 பேர் வீடு திரும்பினர். நேற்று கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 14 என அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 நோயால் மலேசியாவில் மாண்டோர் எண்ணிக்கை 121. கடந்த ஐந்து நாட்களாக அங்கு புதிய மரண எண்ணிக்கை பதிவாகவில்லை.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்