பட்டப்பகலில் போலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை; பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் முதல் சம்பவம்

பட்டப்பகலில் போலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை; பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் முதல் சம்பவம்

1 mins read
21f93092-5862-4172-a2ed-d64b5435ef77
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தைச் சுற்றி போலிசார் தடுப்பு அமைத்துத் தடயங்களைத் திரட்டினர். நியூசிலாந்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலிசாருக்கு துப்பாக்கி வழங்கப்படுவதில்லை. படம்: ஏஎஃப்பி -

ஆக்­லாந்து: நியூ­சி­லாந்­தில் போலிஸ் அதி­காரி ஒரு­வர் நேற்று சுற்­றுக் கொல்­லப்­பட்­டார். பணி­யில் இருக்­கும்­போது போலிஸ் அதி­காரி ஒரு­வர் நியூ­சி­லாந்­தில் கொல்­லப்­ப­டு­வது கிட்­டத்­தட்ட 10 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு இதுவே முதல்­முறை.

ஆக்­லாந்து நக­ரில் வழக்­க­மான போக்­கு­வ­ரத்­துக் கட்­டு­பாட்­டுப் பணி­யில் ஈடு­பட்டு இருந்த போலிஸ் அதி­கா­ரி­களை மர்ம மனி­தர்­கள் கண்­மூ­டித்­த­ன­மாக சுட்­டு­விட்­டுத் தப்­பி­னர். ஒரு­வர் மாண்­டார், மற்­ற­வர் படு­கா­ய­ம­டைந்­தார்.

பொது­மக்­களில் ஒரு­வ­ரும் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. சம்­ப­வம் நிகழ்ந்த நான்கு மணி நேரம் கழித்து வீடு ஒன்றை சுற்­றி­வ­ளைத்த போலிஸ் அதி­கா­ரி­கள் அங்­கி­ருந்த இரு­வரைக் கைது செய்­ததாக ஒரு தக­வ­லும் சுட்­ட­வர்­கள் தேடப்­ப­ட்டு­ வருவ­தாக மற்­றொரு தக­வ­லும் தெரி

வி­த்தன.

மேற்கு ஆக்­லாந்­தில் காலை 10.30 மணி­ய­ள­வில் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

இதற்கு முன்­னர் கடந்த 2009ஆம் ஆண்டு நேப்­பி­யர் நக­ரில் உள்ள ஒரு வீட்­டைச் சோத­னை­யி­டு­வ­தற்­காக அதற்­கான உத்­த­ர­வு­டன் சென்ற மூத்த போலிஸ் அதி­காரி சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். அதன் பிறகு நேற்­று­தான் அப்­படி ஒரு கொலை நிகழ்ந்­தது.

சம்­ப­வத்தை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விளக்­கிய காவல்­துறை ஆணை­யா­ளர் ஆண்ட்ரு காஸ்­டர், கொலைக் கான நோக்­கம் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார். இதற்­கி­டையே, உயி­ரி­ழந்த போலிஸ் அதி­கா­ரி­யின் குடும்­பத்­தி­ன­ருக்கு பிர­த­மர் ஜெசிந்தா ஆர்டென் தமது இரங்­க­லைத் தெரி­வித்­துள்­ளார். மேலும் போலிசாரின் கடைமை களை அவர் பாராட்டினார்.