கோலாலம்பூர்: மலேசிய போலிஸ் மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆட்கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மலேசிய தலைமை போலிஸ் அதிகாரி அப்துல் ஹமித் படோர் தெரிவித்துள்ளார். அண்மையில் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 18 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரிவான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும் அடையாளம் காணப்பட்டோர் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் உள்துறை அமைச்சுக்கும் ஆயுதப் படைத் தலைவருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளதெனக் கூறிய அவர், குற்றம் புரிந்த அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்றார்.

