மலேசியாவில் மத்திய அரசாங்கத்திலிருந்து நிதி ஆதரவு பெறாவிட்டாலும் பினாங்கு மாநில அரசு தனது போக்குவரத்து பெருந்திட்டங்களைத் தொடரும் என அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நிதியின்றி 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பினாங்கு கம்பிவட ஊர்தி, 46 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டம் ஆகியவற்றை பினாங்கு மாநிலம் தொடரும் என அறிவித்துள்ளது.
கொவிட் -19 தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டினால் மட்டும் தடை ஏற்பட்ட என்று மாநில கட்டுமான செயற்குழு தலைவர் ஸைரில் கீர் ஜோகாரி கூறியதாக 'த ஸ்டார்' பத்திரிகை தெரிவித்தது.
பயான் லேபாஸ் இலகு ரயில் திட்டம் எந்த நிதிச்சிக்கலுமின்றித் தொடரும் என்று அவர் கூறினார்.
கடந்த அக்டோபரின்போது முன்மொழியப்பட்டிருந்த பினாங்கு மலை கம்பிவட ஊர்தி சேவைத்திட்டத்திற்காக 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருந்ததாக பக்கத்தான் அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கம் அமைத்ததை அடுத்து இந்தத் திட்டத்திற்கான நிதியை ரத்து செய்துள்ளது.

