பிரேசிலில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் 1 மில்லியனை தாண்டிவிட்டன

பிரேசிலில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் 1 மில்லியனை தாண்டிவிட்டன

1 mins read
1fdbdf0f-bf75-4f9d-a066-f8b32f004618
-

பிரேசிலில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துவிட்டது. கிருமித்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கிவிட்டது. கிருமித்தொற்று சம்பவங்கள் மற்றும் உயிரிழப்பைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசில்தான் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் நேற்று முன்தின நிலவரப்படி மொத்தம் 1,032,913 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதுவரை கிருமித்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,954ஆக பதிவாகியது. நேற்று முன்தினம் மட்டும் அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 54,771 பேருக்கு கிருமி தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், அதிகாரபூர்வமாக பதிவாகியுள்ள எண்ணிக்கையைவிட மேலும் அதிகமானோரைக் கிருமி தொற்றியிருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். பிரேசிலில் கிருமித்தொற்று பரிசோதனை விகிதம் குறைவாக இருப்பதை அவர்கள் சுட்டினர்.

உண்மையிலேயே குறைந்தது 3 மில்லியன் பேரை கொரோனா தொற்றியிருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் வரை இருக்கலாம்," என்று சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் அலெக்சாண்டர் நைமி பார்போசா கூறினார்.