நியூசிலாந்தில் மேலும் இருவருக்குத் தொற்று

நியூசிலாந்தில் மேலும் இருவருக்குத் தொற்று

1 mins read
be1ba3c9-9026-4ba0-b765-a261955806d1
வெலிங்டன் நகர். ஜூன் 14ஆம் தேதி எடுக்கப்பட்டபடம் படம்: ஊடகம் -

வெலிங்­டன்: கொவிட்-19க்கு எதி­ரான போரில் முழு வெற்­றி­கண்ட நியூ­சி­லாந்­தில் நேற்று புதி­தாக இரு­வ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

கிருமி தொற்­றிய இரு­வ­ரும் வெளி­யில் இருந்து நாட்­டுக்­குள் வந்­த­வர்­கள். இவர்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 1,161 பேரைக் கிருமி தொற்றி உள்­ளது.

நியூ­சி­லாந்து சனிக்­கி­ழமை மட்டும் 5,950 பரி­சோ­தனைகளை நடத்­தி­யது. அந்த நாட்­டில் கிரு­மித்­தொற்­றுக்கு இதுவரை 22 பேர் பலி­யாகி இருக்­கி­றார்­கள்.

மொத்­தம் 341,117 பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்டு இருக்­கின்­றன.