வெள்ளம் வருமுன் தயாராகவேண்டும்: ஜோகூருக்கு அறிவுரை

வெள்ளம் வருமுன் தயாராகவேண்டும்: ஜோகூருக்கு அறிவுரை

1 mins read
1bc15254-c18d-4c15-aabe-d5e00bc9db92
-

தற்போது நிலவும் எதிர்பாராத பருவநிலையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க தயாராக இருக்கும்படி சம்பந்தப்பட்ட அமைப்புகளையும் அதிகாரிகளையும் ஜோகூர் மாநில சுல்தா்தோன் இப்ராஹிம் ஜகட்டுக் கொண்டார்.

பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார். ஞாயிறன்று பல மாவட்டங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பாதிக்கப்பட்ட சுமார் 1,210 பே ர் தற்காலிக முகாம்களில் தங்கலெக்கப்பட்டனர். ஆனால் இன்று முகாம்களில் தங்கியிருந்தவர்களில் எண்ணிக்கை சற்று குறைந்தது.

சுமார் 222 குடும்பங்களைச் சேர்ந்த 915 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து நான்கு நிவாரண நிலையங்கள் மூடப்பட்டதாகவும் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் ஆர். வைத்தியநாதன் தெரிவித்தார். இருப்பினும் மற்ற இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேலும் நான்கு முகாம்கள் திறக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலம் முழுவதும் 18 நிவாரண முகாம்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.