பெய்ஜிங்கில் மேலும் ஒன்பது பேர் பாதிப்பு

பெய்ஜிங்: பெய்ஜிங்கில் புதிதாக ஒன்பது பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். முந்தைய நாளில் பாதிக்கப்பட்ட 22 பேருடன் ஒப்பிடுகையில் இது 13 குறைவு.

இருபது மில்லியன் பேருக்கு மேல் வசிக்கும் பெய்ஜிங்கில் இம்மாதம் 11ஆம் தேதி இரண்டாவது அலையாக மீண்டும் புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் பதிவாகின.

பெய்ஜிங்கில் உள்ள ஸின்ஃபாடி ஒட்டுமொத்த விற்பனை, உணவு நிலையத்திலிருந்து கிருமிப் பரவியதாக அப்போது தெரிவிக்கப்பட் டது. இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 236 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 18 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் குறிப்பிட்டது.

இதில் பாதி, அதாவது ஒன்பது சம்பவங்கள் பெய்ஜிங்கில் பதிவான தாக அது கூறியது.

இதற்கிடையே பெய்ஜிங்கில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அறிகுறிகள் தென்படாமல் ஏழு பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இவர்களுக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டாலும் அவர் களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரி வித்தனர். ஸின்ஃபாடி சந்தையில் சால்மன் மீன் வெட்டும் பலகையிலிருந்து கொரோனா கிருமி பரவியதாக நம்பப்படுவதால் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் உணவுப் பதனீட்டு நிறுவனமான டைசன் கம்பெனியிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!