பிறந்து 40 நாட்களான குழந்தை கொவிட்-19ஆல் உயிரிழப்பு; பார்க்க வந்தவரிடம் இருந்து கிருமி தொற்றியது

பிறந்து 40 நாட்களான குழந்தை கொவிட்-19ஆல் உயிரிழப்பு; பார்க்க வந்தவரிடம் இருந்து கிருமி தொற்றியது

1 mins read
e595686b-b336-4f5b-b36c-1d48e85e9030
குழந்தைக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் வந்த பிறகும் பலர் குழந்தையைத் தூக்கியதாக திரு சைஃபுல் குறிப்பிட்டார். மாதிரிப்படம்: PIXABAY -

பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா கிருமித்தொற்றுக்கு பலியாகியுள்ளது.

இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லங்கன் எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்த ஆண் குழந்தை பிறந்து 28 நாட்களானபோது அதற்கு கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த இரு வார சிகிச்சைக்குப் பிறகும் பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

"தொடர்புகளின் தடங்களைக் கண்டறிந்ததில், குழந்தை பிறந்ததைப் பார்க்க வந்த அண்டைவீட்டாரிடமிருந்து குழந்தைக்கு கிருமி தொற்றியது," என கொவிட்-19ஐ கையாளும் பணிக்குழுவின் தலைவர் சைஃபுல் ஹிதயத் நேற்று முன்தினம் (ஜூன் 22) கூறினார்.

குழந்தைக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் வந்த பிறகும் பலர் குழந்தையைத் தூக்கியதாக திரு சைஃபுல் குறிப்பிட்டார்.

கொவிட்-19 மரணங்களுக்கான விதிமுறைகளின்படி குழந்தையின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்