கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் மகனான 32 வயது அகமட் சைஃபூல் இஸ்லாமுக்கு கடந்த ஆண்டு போதைப் பொருளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக நேற்று எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோலாலம்பூர் பொழுதுபோக்கு விடுதி ஒன்றில் கஞ்சாவில் காணப்படும் டிஎச்சி எனும் ரசாயனப் பொருளை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மலேசிய முன்னாள் அமைச்சரின் மகனுக்கு சிறை
1 mins read
போதைப்பொருள் புழங்கிய குற்றத்திற்காக மலேசிய முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் மகனான 32 வயது அகமட் சைஃபூல் இஸ்லாமுக்கு அந்நாட்டு நீதிமன்றம் எட்டு மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. படம்: என்எஸ்டிபி கோப்புப்படம் -

