தேர்தல் பிரசாரத்திற்கு $15 மில்லியன் நிதி திரட்டிய ஒபாமா

தேர்தல் பிரசாரத்திற்கு $15 மில்லியன் நிதி திரட்டிய ஒபாமா

1 mins read
77cb1738-f505-491e-bf71-35c4521e6ea9
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா. படம்: ஏஎப்பி -

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களத்தில் உள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனின் தேர்தல் பிரசார செலவுக்காக முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா 15 மில்லியன் டாலர் நிதி திரட்டித் தந்துள்ளார். திரு ஜோ பைடன் தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்புக்கு எதிராக போட்டியிடவிருக்கிறார். ஆனால் இன்னும் இது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.