இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்டும் பணி தொடக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டப்படவுள்ள முதல் இந்து கோவிலுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

அங்குள்ள எச்-9 பகுதியில் 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்டப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மால்கி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் இந்த கோவில் கட்டப்படுகிறது. கோவிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கோவில் கட்ட ரூ. 10 கோடியை பாகிஸ்தான் அரசு வழங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய லால் சந்த் மால்கி, ‘’இஸ்லாமாபாத்தில் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அவர்களின் நீண்ட கால கோரிக்கையும் கோயில் கட்டுவதன் மூலம் நிறைவேறியுள்ளது.

"1947 ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் அமைந்திருந்த இந்து கோவில்களின் கட்டுமானத்தின்படியும் வடிவமைப்பின்படியும் புதிய இந்து கோவில் கட்டப்படும். இந்து மக்கள் பயன்பாட்டுக்காக மயானமும் அமைக்கப்படும்,‘’ என்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது; பல்வேறு காரணங்களுக்காக கோயில் கட்டும்பணி தாமதமானது குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!