நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் செயல் கட்சியின் ஒன்பது இந்திய வேட்பாளர்களில் அறுவர் அமைச்சரவை பொறுப்புகளில் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களின் தரம் உயர்ந்த நிலையில் உள்ளது என்று அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொதுத் தேர்தலில் 27 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் இந்திய வேட்பாளர்கள் இடம்பெறாத காரணம் குறித்து நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கேட்ட கேள்விக்கு மசெகவின் இரண்டாம் உதவி தலைமைச் செயலாளருமான திரு சான் சுன் சிங் விளக்கம் கொடுத்தார்.
"மசெகவின் 93 வேட்பாளர்களில், இந்திய சமூகத்தின் பிரதிநிதிப்பு 9.7%. அது நாடாளுமன்றத்தில் தேசிய சராசரி அளவைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டில் மக்கள் தொகையில் 9 விழுக்காட்டினர் இந்தியர்கள். உயர் தரம் வாய்ந்த இந்திய வேட்பாளர்களை நாம் தற்போது கொண்டிருக்கிறோம்," என்றும் திரு சான் தெரிவித்தார்.

