அடுத்தாண்டு ஜூலை வரை ஆஸ்திரேலிய எல்லை மூடல்

சிட்னி: அனைத்­து­லக வரு­கை­யா­ளர்­க­ளுக்­கான ஆஸ்­தி­ரே­லிய எல்லை அடுத்த ஆண்­டின் மத்­திய காலம் வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என்று அதன் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் சூச­க­மா­கக் கூறி­யுள்­ளார்.

கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக ஆஸ்­தி­ரே­லியா கடந்த மார்ச் மாதம் அனைத்­து­லகப் பய­ணி­க­ளுக்­கான தனது எல்­லையை மூடி­யது. அது இவ்­வாண்டு இறுதி வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என்­றும் முன்­னர் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தேசிய விமான நிறு­வ­ன­மான குவாண்­டாஸ் 6,000 பேரை வேலை­யி­லி­ருந்து நீக்­கு­வ­தாக அறி­வித்­த­தோடு 12 ஏர்­பஸ் ஏ380 ரக விமா­னங்­களை அடுத்த 3 ஆண்­டு­க­ளுக்கு நிறுத்தி வைப்­ப­தா­க­வும் அறி­வித்­தது.

அப்­போது பேசிய குவாண்­டா­சின் தலைமை நிர்­வாக அதி­காரி ஆலன் ஜோய்ஸ், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்­திற்கு முன் அனைத்­து­லக விமான சேவை­கள் மீண்டும் தொடங்­காது என்று கூறி­னார்.

இது­கு­றித்து எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்த பிர­த­மர் மோரி­சன், "உல­கம் முழு­வ­தும் கிரு­மித்­தொற்­றின் வீரி­யம் அதி­க­ரித்­துக்­கொண்டே இருக்­கி­றதே தவிர குறைந்­த­பா­டில்லை. எனவே ஆலன் ஜோய்ஸ் கூறி­யது நியா­ய­மற்­றது என்று சொல்­வ­தற்­கில்லை,” என்­றார். இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் நேற்று புதி­தாக 30 பேருக்­குக் கிருமித்தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!