பாகிஸ்தானில் 30 விழுக்காட்டினர் போலி விமானிகள்

பாகிஸ்தானில் 30 விழுக்காட்டினர் போலி விமானிகள்

1 mins read
61befbb8-24e4-4877-a9a9-abc773bef6f5
படம்: ஏஎப்பி -

கராச்சி: பாகிஸ்தானிலுள்ள விமானிகளில், 30 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் போலி உரிமங்களை வைத்துள்ளதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர் வார் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்த அவர், நாட்டில் 262 விமானிகள் ஆள் மாறாட்டம் மூலம் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இவர்களுக்கு பறக்கும் அனுபவம் எதுவும் இல்லை என்ற அவர், போலி உரிமம் வைத்துள்ள விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.