ஜூரோங் குழுத்தொகுதியில் 'ரெட் டாட் யுனைடெட்' கட்சியின் வேட்பாளர்கள்

ஜூரோங் குழுத்தொகுதியில் 'ரெட் டாட் யுனைடெட்' கட்சியின் வேட்பாளர்கள்

1 mins read
e8171c5b-c793-465f-82f8-e7d44f80d5b6
(மேல், இடமிருந்து) திருவாட்டி மிஷெல் லீ, திரு ரவி பிலமென், திரு நிக்கலஸ் டெங், திருவாட்டி லியானா தமிரா, திரு அலெக் டோக். படங்கள்: ரெட் டாட் யுனைடெட் கட்சி -

சிங்கப்பூரின் ஆகப் புதிய அரசியல் கட்சியான ரெட் டாட் யுனைடெட் கட்சி ஜூரோங் குழுத் தொகுதியில் போட்டி யிடும் தனது இறுதி வேட்பாளரை நேற்று அறிமுகப்படுத்தி யது. மேடைக்கலை இயக்குநரான 55 வயது திரு அலெக் டோக் கிம் யாம் அவர். மற்ற வேட்பாளர்களான 33 வயது திருவாட்டி லியானா தமிரா, சட்டத்துறை பொறியாளரான 28 வயது திரு நிக்கலஸ் டெங் ஆகியோர் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டனர்.

திரு அலெக் டோக், 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் மேடைக் கலை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உடையவர். திருவாட்டி லியானா வீடில்லாதவராக வாழ்க்கை நடத்திய அனுபவம் கொண்டவர். அதை மையமாக வைத்து அவர் எழுதிய 'வுமன் ஆஃப் ரெசிலியன்ஸ்' எனும் தலைப்பு கொண்ட நூலுக்கு 'அவேர்' அமைப்பின் விருது வழங்கப் பட்டது. திரு டெங் எதிர்காலத் தலைமுறையினருக்கு உதவ தாம் அரசியலுக்கு வந்ததாகக் கூறினார்.

அவர்கள் மூவரும் கட்சியின் தலைவர் திருவாட்டி மிஷெல் லீ, தலைமைச் செயலாளர் ரவி பிலமென் இருவருடன் சேர்ந்து அணி அமைத்துள்ளனர்.