பொதுத் தேர்தலை எதிர்த்து வழக்கு: திங்கட்கிழமை விசாரணை

பொதுத் தேர்தலை எதிர்த்து வழக்கு: திங்கட்கிழமை விசாரணை

1 mins read
01f90191-a0d7-4bda-9463-eaf4a1340150
மனித உரிமை வழக்கறிஞர் எம் ரவி. படம்: எஸ்டி -

சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை இப்போது நடத்துவது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்பதால் இப்போது தேர்தலை நடத்தக்கூடாது என்று தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடும்படி கேட்டு தொடுக்கப்பட்டு உள்ள வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்கிறது.

அந்த வழக்கை டேனியல் டி சூசா சார்பில் மனித உரிமை வழக்கறிஞர் எம் ரவி தொடுத்துள்ளார்.

பிரதமர் பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்பை தேசிய தொலைக்காட்சியில் விடுத்த அதே நாளன்று சில மணி நேரத்திற்குள் தான் நீதிமன்ற நடவடிக்கையை நாடியதாக அந்த வழக்கறிஞர் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். தேர்தல் அதிகாரி என்பவர் பொதுத் துறை அதிகாரி. தேர்தலை மேற்பார்வையிடும்படி அவரை பிரதமர் நியமிக்கிறார்.