வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்குமாறு மலேசிய செம்பனை நிறுவனங்கள் கோரிக்கை

வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்குமாறு மலேசிய செம்பனை நிறுவனங்கள் கோரிக்கை

1 mins read
8e557f34-07b0-4e49-96c9-56709100f925
உலகிலேயே செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது ஆகப் பெரிய நாடான மலேசியாவில் ஊழியர்களுக்கான கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் செம்பனை தோட்டங்களில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்குமாறு தோட்ட நிர்வாகத்தினர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஊழியர்களைப் பணிக்குத் திரும்ப அனுமதிக்காவிட்டால், செம்பனை எண்ணெய் துறைக்குப் பெரும் சேதம் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகிலேயே செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது ஆகப் பெரிய நாடான மலேசியாவில் ஊழியர்களுக்கான கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

செம்பனை தோட்ட ஊழியரணியில் 70 விழுக்காடு அளவு வெளிநாட்டு ஊழியர்களை, குறிப்பாக, இந்தோனீசியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சார்ந்துள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்