அமெரிக்காவில் ஒரே நாளில் 45,200 பேருக்கு கிருமித்தொற்று

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 45,242 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களையும் சேர்த்து, அமெரிக்காவில் இதுவரை குறைந்தது 2.48 மில்லியன் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

பல மாநிலங்களில் வர்த்தக செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் வேளையில், கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தற்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சஸ் மாநிலத்தில் மதுபானக் கூடங்களைப் பிற்பகல் நேரங்களில் மூடவும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை 50 விழுக்காடாக குறைக்கவும் அம்மாநில ஆளுநர் கிரெக் எபட் உத்தரவிட்டுள்ளார்.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு மாநிலமான ஃபுளோரிடாவில் செயல்படும் மதுபானக் கூடங்களில் மதுபானங்களைப் பரிமாறுவதை உடனடியாக நிறுத்த மாநில அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள பல மாநிலங்களில் டெக்சஸ் முன்னணி வகிக்கிறது. அம்மாநிலத்தில் கடந்த மாதம் மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டன.

அதையடுத்து, அங்கு கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அம்மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் கிட்டத்தட்ட 6,000 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த இரு வாரங்களாக அங்கு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஃபுளோரிடாவில் நேற்று முன்தினம் மட்டும் 8,942 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்ட 5,511 சம்பவங்களே ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை எனக் கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பதிவான எண்ணிக்கை அதையும் கணிசமாக மிஞ்சிவிட்டது.

அமெரிக்காவில் கிருமித்தொற்று பாதிப்பால் இதுவரை கிட்டத்தட்ட 125,000 பேர் உயிரிழந்துவிட்டனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் உயிரிழப்புகள் ஆக அதிகம்.

நாட்டில் கிருமித்தொற்று நிலவரம் இப்படி மோசமாக இருக்கும் வேளையில், பொருளியல் நெருக்கடி நிலையிலிருந்து அமெரிக்கா படிப்படியாக மீண்டு வருவதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!