சிறுவனைத் தாக்கி தப்பிப்பதற்காக சாகசங்களைச் செய்த போதைப் புழங்கி

சிறுவனைத் தாக்கி தப்பிப்பதற்காக சாகசங்களைச் செய்த போதைப் புழங்கி

1 mins read
6801ced9-0cfd-4784-b78d-a139e4e225f5
-

லேசியவின் சரவாக் மாநிலத்தில் 14 வயது சிறுவனை ஓர் ஆடவர் அரிவாளாலும் கோடாரியாலும் தாக்கிய பின் அவர் வீட்டுக்கூரையின்மீது ஏறி உயரத்திலிருந்து குதித்துத் தப்பிக்க முற்பட்டார். சராடோக் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல் நேற்று மாலை 5 மணிக்குக் கிடைத்ததாக சரவாக் தீயணைப்பு, மீட்புத் துறையினர் தெரிவித்தனர். "வீடு ஒன்றின் கூரையில் அமர்ந்துகொண்டிருந்த அந்த ஆடவரை கீழே இறக்க உதவும்படி போலிசார் எங்களைக் கேட்டுக்கொண்டது. போதை மயக்கத்தில் அந்த ஆடவர் சிறுவனைத் தாக்கியதாக அவர்கள் கூறினர்," என்று அவர்கள் கூறினர்.

தாக்கப்பட்ட சிறுவனின் உடலிலும் கை கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன. ஊர்க்காரர்கள் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கீழே இறங்கும்படி அந்த ஆடவரைப் போலிசார் வற்புறுத்தியபோதும் அவர் ஒத்துழைக்க மறுத்தார. தமது கோடாரியால் கூரையை உடைத்து அமைத்த சிறு துவாரம் வழியாக வீட்டுக்குள் இருந்த ஓர் அறைக்குள் குதித்து பின் அந்த அறையின் சன்னலிலிருந்து கீழே குதித்து வீட்டுக்குப் பக்கத்திலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தார்.

இறுதியில் போலிசாரும் ஊர்க்காரர்களும் அந்த ஆடவரை மடக்கி பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.