சிங்கப்பூரின் ஆகப் புதிய அரசியல் கட்சியான ரெட் டாட் யுனைட்டெட், வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, வேலை நியமனம் ஆகியவற்றில் கொள்கை மாற்றங்களுக்காகப் பாடுபடத் திட்டமிடுகிறது. அந்தக் கட்சி நேற்று 12 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
சிங்கப்பூரர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் மன உளைச்சலையும் கவலையையும் குறைக்கவும் அவர் களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அந்தத் துறைகளில் கொள்கை மாற்றங்கள் தேவை என்று கட்சி கூறியது.
அரசாங்கக் கொள்கைகளில் மேலும் நீக்குப்போக்குத் தேவை என்று கட்சி விரும்புவதாக அதன் தலைவர் திருவாட்டி மிக்சைல் லீ நேற்று நடந்த ஸூம் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

