பிரான்ஸ் தேர்தல்: முகக்கவசம் அணிந்து வந்த வாக்காளர்கள்

பிரான்ஸ் தேர்தல்: முகக்கவசம் அணிந்து வந்த வாக்காளர்கள்

1 mins read
33e6b62b-39aa-40cc-a95b-fe964ad801e0
பிரான்ஸ் நாட்டில் நடந்த நகராட்சித் தேர்தலில் முகக்கவசம் அணிந்தபடி மக்கள் வாக்களித்தனர். படம்:இபிஏ -

பாரிஸ்: கிரு­மித்­தொற்று கார­ண­மாக முடக்­கப்­பட்­டி­ருந்த பிரான்­சில், மூன்று மாத தாம­தத்­திற்­குப் பிறகு நக­ராட்­சித் தேர்­த­லின் இரண்­டா­வது கட்ட வாக்­குப்­ப­திவு நேற்று நடந்­தது.

பிரான்­சில் 2022ஆம் ஆண்டு அதி­பர் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ள­தால், தற்­போ­தைய அதி­பர் இம்­மா­னு­வேல் மெக்­ரோ­னுக்கு இது இடைக்­கால சோதனை என்­று­தான் சொல்ல வேண்­டும். இத்­தேர்­த­லில் பல இடங்­க­ளைக் கைப்­பற்றி பாரிஸ் உட்­பட பிரான்ஸ் முழு­வ­தி­லும் கட்­சி­யின் பலத்தை நிலை­நாட்ட விரும்­பி­னார் மெக்­ரோன்.

ஆனால் அவ­ரது கட்­சி­யின் வேட்­பா­ளர்­களில் பெரும்­பா­லோர் மார்ச் 15ஆம் தேதி­யன்று நடை­பெற்ற முதல் சுற்று வாக்­கெ­டுப்­பில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது அவ­ருக்­குப் பெரும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.