அமெரிக்க வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள்

அமெரிக்க வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள்

1 mins read
d86f1646-fde8-4322-9fc1-549c14847e6c
அலாஸ்கா வான் பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் இந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக அத்துமீறி நுழைய முயற்சித்ததாக அமெரிக்க விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎப்பி -

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா நகரின் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள அல்யூடின் தீவுகளுக்கு அருகேயான அனைத்துலக வான் எல்லையில் ரஷ்யாவின் டியூ-142 ரக உளவு விமானம் பறந்தது.

இதையடுத்து, அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான எஃப் 22 ரக போர் விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று ரஷ்ய விமானத்தை நடுவழியிலேயே இடைமறித்தன.

இந்த மாதத்தில் அலாஸ்கா வான் பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் நான்காவது முறையாக அத்துமீறி நுழைய முயற்சித்ததாக அமெரிக்க விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.