இலங்கையில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டன

கொழும்பு: இலங்கையில் கிருமித்தொற்றின் சமூகப் பரவல் இல்லை ஏனு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக அதிபர் தெரிவித்தார். கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 20ஆம் தேதி இலங்கை முடக்கப்பட்டது.

அதன் பிறகு கடந்த இரண்டு மாத காலமாக படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மே மாத இறுதியில் சமய நடவடிக்கைகளுக்காகவும் இறுதிச் சடங்கிற்காகவும் கூடுபவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இலங்கையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முற்றிலும் தளர்த்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.