புகார்: மசெக புதிய வேட்பாளர் மறுப்பு

1 mins read
d4cddbb3-06af-4d16-90e0-7ac814f4d11b
மக்கள் செயல் கட்சி பொதுத்தேர்தலில் நிறுத்தி இருக்கும் புதுமுகங்களில் ஒருவர் ஷான் ஹுவாங், 37. (படம்) இவர் முன்பு மோசமாக நடந்து கொண்டு இருக்கிறார் என்று இணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் புகாரை இவர் மறுத்துள்ளார். -

மக்கள் செயல் கட்சி பொதுத்தேர்தலில் நிறுத்தி இருக்கும் புதுமுகங்களில் ஒருவர் ஷான் ஹுவாங், 37. (படம்) இவர் முன்பு மோசமாக நடந்து கொண்டு இருக்கிறார் என்று இணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் புகாரை இவர் மறுத்துள்ளார். 2018 தேசிய நாள் அணிவகுப்பு ஒத்திகையின்போது உணவுப் பொட்டலத்தை அதிகாரிகள் மீது தூக்கி எறிந்ததாக இவர் மீது லின் லியோ என்பவர் புகார் தெரிவித்தார்.

2018ல் தேசிய நாள் அணிவகுப்புத் தளபதியாக திரு ஹுவாங் இருந்தார். அப்போது வாரண்ட் அதிகாரியாக இருந்தவர் லின் லியோ. ஒரு நாள் திரு ஹுவாங் உணவுப் பொட்டலத்தைச் சேவையாளர்கள் மீது தூக்கிப்போட்டதாக லின் லியோ தெரிவித்திருந்தார்.

இதனை ஃபேஸ்புக்கில் மறுத்துள்ள திரு ஹுவாங், தன் மீது புகார் தெரிவித்த லின் லியோவுடன் தொடர்புகொண்டு விளக்கம் அளிக்க தான் முயன்றதாகவும் ஆனால் அந்தப் பதிவு அகற்றப்பட்டு விட்டதால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஜூரோங் குழுத்தொகுதியில் திரு ஹுவாங் வேட்பாளராகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.