‘தற்போதைக்கு கிருமித்தொற்று முடிவடையும் சூழல் இல்லை’

ஜெனீவா: கொரோனா கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்டு கிட்­டத்­தட்ட ஆறு மாதங்­கள் ஆகி­விட்­டது என்­றா­லும் கிருமிப் பர­வல் தற்­போ­தைக்கு முடி­வ­டை­யும் சூழல் இல்லை என்று உலக சுகா­தார அமைப்­பின் தலை­வர் டெட்­ரோஸ் அதா­னம் கெப்­ரே­யஸஸ் கூறி­யுள்­ளார்.

சென்ற டிசம்­பர் மாதம் சீனா­வில் கிரு­மித்­தொற்று கண்­ட­றியப்­பட்­ட­தற்­குப் பிறகு, உல­க­ள­வில் ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்­கப்­பட்டு 5 லட்­சத்­திற்­கும் மேலா­னோர் உயி­ரி­ழந்துவிட்ட மோச­மான நிலையை அடைந்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

“பெரும்­பா­லான மக்­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். கிருமி இன்­னும் அதி­கம் பரவ வாய்ப்­புள்­ளது.

“நாம் அனை­வ­ரும் இது முடிந்து­விட வேண்­டும் என்று விரும்­பு­கி­றோம். நாம் அனை­வ­ரும் நம் வாழ்க்­கையை பழை­ய­படி தொடர விரும்­பு­கி­றோம்.

“ஆனால் கடி­ன­மான உண்மை என்­ன­வென்­றால், கிரு­மிப் பர­வல் முடி­வ­டை­வ­தற்­கான சூழல் தற்­போ­தைக்கு இல்லை.

“பல நாடு­கள் கிரு­மித்­தொற்­றில் இருந்து மீள்­வ­தற்­கான முயற்­சி­யில் முன்­னேற்­றம் கண்­டுள்­ளன, என்­றா­லும் கிரு­மி வேக­மாகப் பரவி வரு­கிறது,” என்­றார்.

இதற்­கி­டையே கிரு­மித்­தொற்று எவ்­வாறு தொடங்­கி­யது என்­ப­தை ஆராய்­வ­தற்கு உலக சுகா­தார அமைப்பு அடுத்த வாரம் ஒரு குழுவை அனுப்­ப­வுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

“கிருமிப் பர­வல் எவ்­வாறு தொடங்­கி­யது என்­பது உட்­பட கிரு­மியை பற்­றி முழு­மை­யாகத் தெரிந்­து­கொண்­டால், அதற்கு எதி­ராக இன்­னும் சிறந்த வழி­யில் போராட முடி­யும்,” என்­றும் டெட்­ரோஸ் அதானம் சொன்­னார்.

“கிரு­மித்­தொற்­றில் இருந்து பாதுக்­காக்­கக்­கூ­டிய தடுப்­பூசி கண்­டு­பி­டிப்­பில் பெரு­ம­ளவு முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது என்­றா­லும் அது எந்­த­ள­வுக்கு வெற்­றி­ய­டை­யும் என்­ப­தற்கு எந்த உத்­த­ர­வா­த­மும் இல்லை என்று உலக சுகா­தார அமைப்­பின் அவ­சர திட்­டப் பிரி­வின் தலை­வர் மைக் ராயன் சொன்­னார்.

ஆனால் இடைப்­பட்ட காலத்­தில் தீவிர பரி­சோ­தனை, தனி­மைப்­

ப­டுத்­தல், தொடர்பு தட­ம­றி­தல் ஆகி­ய­வற்­றின் மூலம் உலக நாடு­கள் கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராகப் போராட வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

கிருமிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஜப்­பான், தென்­கொ­ரியா, ஜெர்­மனி உள்­ளிட்ட நாடு­க­ள் மேற்கொண்ட முயற்­சி­களையும் அவர் பாராட்­டி­னார்.