ராணுவ தளவாட ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை; விசா வழங்க மறுக்கும் சீனா

வாஷிங்­டன்: ஹாங்­காங்­கிற்­கான தேசிய பாது­காப்பு சட்­டத்தை சீனா நிறை­வேற்­றி­ய­தைத் தொடர்ந்து, ஹாங்­காங்­கிற்கு அதி­ந­வீன பாது­காப்பு ராணுவ உப­க­ர­ணங்­களை ஏற்­று­மதி செய்யத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ அறி­வித்­துள்­ளார்.

ஹாங்­காங்­கின் சுதந்­தி­ரத்தை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரும் வகை­யில் சீனா இச்­சட்­டத்­தைக் கொண்டு வந்­துள்­ள­தாக ஹாங்­காங் ஆர்­வ­லர்­கள் கரு­து­கின்­ற­னர்.

சீனா­விற்கு எதி­ராக ஹாங்­காங்­கில் வன்­மு­றை­யில் ஈடு­ப­டுப­வர்­க­ளுக்குக் தண்­டனை விதிக்­கும் வகை­யில் சீனா இச்­சட்­டத்தை நிறை­வேற்­றி­யுள்­ளது.

இச்­சட்­டம் தொடர்­பில் உலக நாடு­கள் பல­வும் சீனா­வைக் கண்­டித்து வந்­தா­லும் அது தன் முடி­வில் இருந்து பின்­வாங்­க­வில்லை.

இதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்­வா­க­மும் ஹாங்­காங் தொடர்­பான தனது கொள்­கை­களை மாற்றி அமைக்க முடிவு செய்­துள்­ளது.

இது­கு­றித்து பேசிய பொம்­பியோ, “எங்­க­ளைப் பொறுத்­த­வரை இனி சீனா­வும் ஹாங்­காங்­கும் ஒன்­று­தான். சில பொருட்­களைச் சீனா­விற்கு கொடுப்­ப­தில் என்ன கட்­டுப்­பாடு உள்­ளதோ அதே­தான் ஹாங்­காங்­கிற்­கும் பின்­பற்­றப்­படும்,” என்­றார்.

ஹாங்­காங் முழு­வ­து­மாக, சீன ஆட்­சி­யா­ளர்­கள் மற்­றும் ராணு­வத்­தின் பிடி­யில் வந்­து­விட்­டால், தான் செய்­யும் பாது­காப்பு உதவி மூலம் சீன ஆயுத வலிமை அதி­க­ரித்து அது தனக்கோ பிற நாடு­க­ளுக்கோ கேடு விளை­விக்­கக்­கூ­டாது என்­ப­தில் அமெ­ரிக்கா முன்­னெச்­ச­ரிக்­கை­யாக உள்­ளது என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­கி­டையே, ஹாங்­காங்­கின் சிறப்பு அந்­தஸ்­தைத் திரும்ப பெறு­வ­தாக அமெ­ரிக்க வர்த்­தகத் துறை அறி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பழி­வாங்­கும் வித­மாக ஹாங்­காங் தொடர்­பான விஷ­யங்­களில் மிக மோச­மாக நடந்­து­கொண்ட அமெ­ரிக்­கர்­க­ளுக்கு எதி­ராக விசா கட்­டுப்­பா­டு­களை விதிக்க சீனா முடிவு செய்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!