'சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை' கட்சியைக் கலைத்துவிட்டு, மீண்டும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து, ஹாலந்து - புக்கிட் தீமா குழுத் தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி தருவதாகக் கூறினார் திரு டான் ஜீ சே. கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி சார்பாக அதே தொகுதியில் களமிறங்கிய திரு டான், பின்னர் அக்கட்சியைவிட்டு விலகி அவ்வாண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அதில் 25.04% வாக்குகளைப் பெற்று அவர் மூன்றாமிடம் பிடித்தார்.
டான் ஜீ சே: மகிழ்ச்சி தரும் மறுவருகை
1 mins read
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி சார்பாக ஹாலந்து - புக்கிட் தீமா குழுத் தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி தருவதாகக் கூறினார் திரு டான் ஜீ சே. படம்: எஸ்பிஎச் -

